...ச்சி என்னை கொன்ற பாவி நீயா ?
சாதி என்ற ஒன்றிற்கு முன்னால்
நீ என்ன செய்தாய் யோசித்து கொள்?
சாதி என்றால் என்ன
ஒரு நிமிடம்
வினவிப்பார்கிறேன்....
இருப்பினும்
உரைப்பார் யாருமில்லை ,
ஏய் ,
சமுகமே சாதி என்னும் வேலி
கொண்டு என்னை அடக்கிட யாருமில்லை
மின்மினி பூச்சிகளாக
நாங்கள் இருந்தாலும்
வேதம் சொல்லும் நிலையில்
நீ இருந்தாலும்
எங்களின் பார்வையால்
நீ நசுக்கபடுவாய் தெரிந்து கொண்டு
ஓடிவிடு ,
பலரின் கேள்விக்கு விடைகாணும்
இடம் எது ?
இரு
வினவிப்பார்கிறேன்.,
பதில் ஏதும் இங்கில்லை
மழை வேண்டி கழுதைக்கு திருமணமாம்
மனம் கொண்ட எங்களுக்கு
மரண ஓலமாம் ?
என்னயென்று
கேட்பார் யாருமில்லை ,
சாதி என்ற பெயர் கொண்டு
இருமனங்களை கொன்ற
உங்களுக்கு விடுதலையாம்!
எங்களுக்கு
மரணதண்டனையாம் ?
கவனங்கள் ,
கவனியுங்கள்.,
பள்ளிகளில் எல்லாம்
எம் நாட்டு மக்கள்
என்ற உறுதி மொழியை
மாற்ற சட்டம் வரவில்யோ ?
மாற்ற சொல்லுங்கள்
இனி
சாதி சான்றிதழ் இல்லாத
தேச மக்கள் சேர்ந்திடும்
பள்ளி தான் இங்குண்ட
மாற்ற சொல்லுகள்
இனி
சாதி இல்லாமல் பழகிய
எங்களிடம்
பாசத்தை கற்று கொள்ளுங்கள்
பகைமையை
காற்றில் வீசாதீர்கள்
என்னை குத்தி
கிழித்த உன்னை
கொன்றிடும்
காலம்
எங்கள் கையில்
அதனை நீ
வென்றிடுவாயோ!
அதுதான் முடிவெனில்
என் எழுதுகோலுக்கு
முதல் பலி
நீ தான் ,
இனி எண்ணி
நகையாடுவேன்
சாதி இல்லா பூமி இது !!!
(உயிரை கொன்றிடும் மதங்களும்,சாதிகளும்
எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிடுவோம்
அதனை வென்றிடுவோம்)