மைக்ரோ கதை
மைக்ரோ கதை
...............................
மூன்று வருடம் கழித்து மகன் வெளிநாட்டில் இருந்து வந்ததால் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை சுப்பம்மாவுக்கு.
-
அவனுக்குச் சாப்பிடுவதற்காக ப்ரெட் டோஸ்டும், ஆம்லேட்டும், பர்க்கர், பீட்ஸô என பேக்கரி அயிட்டங்களும், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் சில்லி புரோட்டா, சப்பாத்தி, சிக்கன் பிரை, பிஷ் பிரை என நிறைய அயிட்டங்களைத் தயாரித்து வைத்திருந்தாள்.
-
மகன் குளித்துவிட்டு வந்ததும், சாப்பிட உட்கார்ந்தான். இலையைப் போட்டு அதில் பரிமாறப் போனாள்.
மகன் சொன்னான்: “”இதெல்லாம் சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு. பழையதும், சுண்டக்கறியும் இல்லியா? அது இருந்தா போதும்”
=========================
–எஸ்.செல்வசுந்தரி, திருச்சி-12.