தென்றலதன் தூதுசொல்ல யாருமில்லை.....!
சுவாசக் கோளாறாம் சில்லிட்ட காற்றுக்கு
நாசமாய் போனநம் மானுட மூச்சிழுத்து...
=====================================
பாசத்தோ டணைக்க பறவைக்கும் பஞ்சம்
வசந்தம் இழந்தபின் உறவென்ன கொஞ்சம்
=======================================
காமத்தில் திளைத்தகார் மேகமும் ஓடுது
சாமத்து வேளையும்வளி சுமத்தால் வாடுது =======================================
புகைந்தும் புகைத்தும் கெடுக்கும் இனமிது -என
நகைத்துக் கொண்டே நாதியின்றி பாடுது
========================================
தூரப்போ தொலைவேப்போ சுடுசுடு காற்றே-என
விரட்டுது தழுவாமல் விடமுண்ட நாற்றே
======================================
முலைப்பால் வற்றிய நிலத்தாய் ஊற்றே
களைப்பினை களைவாயென கதறியது நேற்றே
========================================
கவிசுமந்த காற்றிலினி ஈரமும் இல்லை
புவிசுமந்த மனிதனோ செவிமடுப்பதும் இல்லை
==========================================
தென்றலதன் தூதுசொல்ல யாருமில்லை
தோள்சாய்ந்து அழுதுகொள்ள மரமுமில்லை
==========================================