குடையின் கவி நடை - அழகின் உரை நடை

எழிலாய் ஆடும் மயிலே கேளு
எனக்கும் அழகு தோகை உண்டு...!

மழை பொழிந்தால் நானும் விரிப்பேன் தோகை
மனிதரின் கைகளில் அது பூச்செண்டில் ஜரிகை....!

கோடை வெயிலிலும் வானவில் நானே
கொஞ்சும் முத்தத்திற்கு குட்டி அறை நானே...!

உன் அழகுத் தோரணை உனக்கு மட்டும் மயிலே...!
என் அழகுப் பயனை எடுத்துக் கொள் பாடமாய்.....!

பறந்து விரிகிறேன் பண்போடு கடமை செய்ய
பணிவோடு ஒடுங்குகிறேன் கிழிசல்கள் தவிர்க்க...!

கூரிய நாக்கு எனக்கும் உண்டு - மனிதர்போல்
குத்திப் பேசி நான் அறிந்ததே இல்லை.....!

எனக்கு தலை துவட்ட மனிதர் இல்லை என
எந்நாளும் நானும் வருந்தியதில்லை.......

தாய் தென்றல் தாவியே என்னை அணைப்பாள்
தங்கமே நனைந்தாயோ ? என தலை துவட்டுவாள்

மனிதர்க்குப் புரியாது எனது உணர்வுகள்
மண்டையில் பகுத்தறிவு நிறைந்தவன் அவன்...

மயிலே அவன்போல் ஆட்டம் போடாதே-தன்னிலை
மதித்தே என்னைப் போல் எந்நாளும் நீயிரு....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Sep-13, 1:53 am)
பார்வை : 71

மேலே