சித்திரையில் தென்ன மழை

சித்திரையில் தென்ன மழை
கோடை மழை குலுங்கி
கொட்டுகிறது
காட்டுமல்லிகை
கொட்டிக் குவிந்ததுபோல்;

ஆடைநனைந்த அழகுப்பெண்கள்
ஆடினப் பாடினத் தகதிமிதோம்;

வேடுவனின் வில்லும்
உண்டில் கல்லும்
வேடிக்கைப் பார்த்தன
நாடகமென்று;

ஓடிவந்த தாவணிப்பெண்கள் – தன்
ஒருக்கை மழைநீராள்
ஓதினர் பருவமந்திரங்கள்;

காட்டுக்குயில்களின் கீதம்
காணாமல் போனது ஒரு
காத தூரம்;

வீட்டுக்குட்டிகளும் விளையாடிட
விரைந்தனர் தாழ்வார
ஓரம்;

மீட்டுவந்த இல்லாளின் கைவளைக்கு
தீட்டுப்பட்ட இன்பம் உழவனுக்கு;

ஆட்டுப்பட்டிக்குள் அடியளவு தண்ணீர்
ஆடுகளை,
மாட்டுக்கொட்டகைக்கு
மாற்றிக்கட்டிய மேய்ப்பாளன்;

கூரை நடுமேட்டில்
ஓலை சொருகுது ஒருக்கூட்டம்
தேரைகள் தாவி
தூர ஓட்டம்;

பனை மட்டைகளை நடு வாட்டையில்
போட்ட பள்ளிக்கூடப்
பையன்;

நார்கிழிக்க ஊரல்போட்ட பனைமட்டையுள்
நீர்கோர்ந்ததை உளவுப்பார்த்தச் சிட்டுப்பெண்;

நனையாதே மழைநீரில் – என்று
சுவையாக ஓடிவந்த இல்லாள்;

மனையாடும்படி இடி இடித்தது!
தனைமறந்து, தாய் மனம் துடிதுடித்தது;

தாவி ஓடி கட்டியணைத்தனள்
தம்மக்களை அச்செந்நெல்லாள்;

தண்ணீர் புகாத கோழிக்கூண்டினுள்
தவலைகள் தாவிடும் நேரம்;

கொக்கொக்கென கொண்டைக்கோழிகள்
குலுக்கிகினது தன் உடலை
கொஞ்சம், பாரும்...;

கண்ணில் மழைத்துளி பட – அக்கன்னி
விண்ணில் வெளிச்சம் பார்கிறாள்,..

மின்ன்ல் மேகத்தை பொளிந்தது,
கண்ணில் மழைத்துளி விழுந்து நனைந்தது;

நாய்கள் நடுநடுங்கி,
புளியமர வேருக்குள்
புகுந்து பதுங்கின;

நாங்கள் மதிக்கும் தமிழ் கிழவி,
நாலுவரி பாடத்தொடங்கினாள்
“டே பேரா,...
பங்குனியில் மழை பொழிஞ்சா
பத்துக்கும் பகை
சித்திரையில மழை பொழிஞ்சா
செல்வமுடா’’ - என்று.

...மேகம் தூவிய நீர்மலரை
தாகம் தீர்த்திட தேக்கிடுவோம்
செழிதிடுவோம்...

எழுதியவர் : சங்கர் இரங்கசாமி (3-Sep-13, 10:24 pm)
சேர்த்தது : shankar
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே