நீயே என் வரமானாய் .....!!

எழுத்து வலைத்தளத்தில்
வாசிக்க வந்தேன் ....

வாசிக்க வாசிக்க
நேசிக்க வைத்தாய் ....

சுவாசமே எழுத்தாய்
ஆனேன் இன்று ....

அன்னையாய் என்னை
அரவணைத்தாய்....

படைப்பாளியாய் என்னை
அங்கீகரித்தாய் ...

கருத்தால் என்னை
கவர்ந்திழுத்தாய் ....

விருப்புடன் கவிதை
புனைய வைத்தாய் ....

நல்லன சொல்லும்
நட்பு தந்தாய் ....

பாசமழை பொழியும்
உறவும் தந்தாய் ....

விதையாய் வந்தேன்
களம் தந்தாய் ....

துளிர்விட நீரூற்றி
உரம் போட்டாய் ...

வேர் பதித்தேன்
திடமாக .....கவித்

தேர் இழுப்பேன்
வடமாக ......

எழுத்தே என்
வரமாக .....

பேர் எடுப்பேன்
சிறப்பாக .....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Sep-13, 10:25 pm)
பார்வை : 131

மேலே