கைக்குட்டை கண்ணீர்....

அழுக்கோடு கொஞ்சம்
மேலாடையும்
சுருக்கம் ஆட்சி புரியும்
தோலாடையும்
உயிரோடு இருக்கும்
கம்பீர மீசையும்
உயிர் இழந்து
கொண்டிருக்கும்
பாஷையின் ஓசையும்
ஆங்காங்கே புண்களின்
மீது பனித்துளியாய்
படுத்துறங்கும்
ரத்தமும்
கைக்குட்டைகள்
பல இடதிலும்
கைக்கட்டை
பாலமாய் வலதிலும்
தளராத 80 வயது
சட்டென குறுக்கிட்டது
சாலை சிக்னலில்
சாமி வாங்கிகோங்க
வெறும் 10 ரூபா தானுங்க
என்ற உரிமைக் குரலுடன்
முழுக் கவனம்
செலுத்தினார்கள்
மக்கள்
சிக்னலின் மீது மட்டுமே!!!
சட்டை இல்லாத
யாரும் சட்டை பண்ணாத
அந்த கைக்குட்டை
கண்ணீரோடு சொன்னது
ஆடம்பரக் கடையில் இதே
கைக்குட்டையை
50 ரூபாய்க்கு வாங்கும்
ருசி வயிற்று
மனிதர்களுக்கு
நம் பசி வயிறு
எப்படி தெரியும் என்று...
எழுத்து
ஜெகன்.G