அன்புள்ள அப்பாவுக்கு
அன்புள்ள அப்பாவுக்கு
குழந்தைகள் ஆசையை நிறைவேற்ற
அப்பாகளுக்கு சிறிதேனும் சிரமம்
இல்லாமல் இருந்ததில்லை,
இருந்தாலும் அப்பாக்கள்
அதை கஷ்டமாய்
நினைப்பதில்லை,
நீ கூட அப்படித்தானோ என் அப்பா ?
எப்பொழுதோ !
நான் கேட்ட
விலை அதிகமான
விளையாட்டு பொம்மையை,
வாங்கித்தர முடியாது
என மறுத்திருக்கலாமே ?
அல்லது
அதை வாங்கித்தர நீ
இரு இரவுகள்
உறக்கம் இல்லாமல்
உழைக்க வேண்டும்
என்பதையாவது சொல்லிருக்கலாமே,
என் சிரிப்பை பார்க்க அவ்வளவு ஆசையா ?
மற்றொருமுறை ,
நான் வாங்கிய
எட்டாவது மதிப்பெண்ணை பார்த்து,
எனக்கு முத்தமிட்டு,
முட்டாய் வாங்கி கொடுத்து,
பெருமை பேசினாயே ,
ஒன்னாவது மதிப்பெண் ஏன்டா வாங்கலனு திட்டி இருக்கலாமே ?
ஏன்? நான் உனக்கு அவ்வளவு செல்லமா?
நீ
என்னை அதிகமாய் கொஞ்ச
நேரம் இல்லாத பொது,
அம்மாவுக்கு மட்டும்தான்
என்னை பிடிக்குமோ
என்று
நினைத்து வந்தேன்,
ஆனால்,
நான் உறங்கிய பின்பு,
நி வேலை முடித்து வந்து,
எனக்கு உறக்கம் களையாமல்
கொஞ்சிப்போனதை
அம்மா அப்பொழுதே
என்னிடம் சொல்லிருக்கலாமோ ?
அட போடா,
இதெல்லாம் பெருமையா ?
கடமைடா ...
என்று நீ பெருந்தைமையோடு சொல்லிவிட்டு போகிறாய்...
நீ இதுவரை,
பெத்தகடனுக்கு,
ஏதோ கடமைக்குனு செய்யலையே,
நான் இஷ்டப்பட்டதை , கஷ்டப்பட்டுதானே செய்து கொடுத்தாய்,
குழந்தைகள் ஆசையை நிறைவேற்ற
அப்பாகளுக்கு சிறிதேனும் சிரமம்
இல்லாமல் இருந்ததில்லை,
இருந்தாலும் அப்பாக்கள்
அதை கஷ்டமாய்
நினைப்பதில்லை,
நீ கூட அப்படித்தான் அப்பா....