அம்மா என்ன சொல் ?

அம்மா...! என்ற சொல்...?
ஓர் தாய் இறந்த பின்,
ஓர் மகனின் வலி..!
என்னவாக இருக்கும்?
என் கவிக்கற்பனையில்..!
கதறி என் அழுதவரிகள்..!
இதோ.....
இந்த கவிதை வலைகுடாவில்
சென்ற முதல் நாள் அனுபவம்..
முன்னூறு நாள் சுமந்த தாய்க்காக..!
தாயே...!
ஊர்வன முதல், பறப்பன வரை..
உலகம் முதல், இவ் ஊர் வரை...
தேடித் திரிகிறேன் தாயே..!
உம் பாசத்திற்கு ஈடுயிணை,
ஒருவரையும் காணலேன்...!
ஓராயிரம் பண் நா..! பாடினாலும்
பாராயிரம் கண் நீ..! பார்த்தாலும்,
ஒரே ஒரு *சன்* என்னைத்தவிர..
ஒரே ஒரு *மண்* உன்னைத்தவிர...
ஏதுமில்லை இவ்வுலகிலே..
மீதியெல்லாம் வெறுமனே..!
அன்று கருவறையில் காத்திருந்து,
எட்டுமாதத்தில் இப்பூமியில் பூத்தது...
உன் பிரிவின் வலி பார்கத்தானா?
உன்னை அங்கே..! தொலைத்துவிட்டு
நான் மட்டும் இங்கே..!
என்ன தவறு செய்தனை?
கூட்டமிருந்தும் அனாதை நான்..!
அம்மா...! பலைய நினைவுகளுக்கும்..!
இந்த பாலைவன தொல்லைகளுகும்,
பார்த்து பார்த்து ஏங்கி அழுகின்றன..?
உன்மடிதேடி கவலை கண்நீர் ஊற்றி..
அந்த கருவேலங்காடு தாலாட்டுக்காய்...
என் கண்ணீரின் சுவையறிந்தவள் நீ..!
என் கஷ்டங்களை உம் மார்போடு...
மல்லுகட்டிய வென்ற மனுஷியும் நீ...!
இளமையில் நான் அழுது பாசத்தின்,
காதலில் கலங்கி நான் நின்றபோது..!
கிழிந்த சேலைகொண்டு முகம்துடைத்து
நான் இருக்கேன் அழாதடா என்றவளும் நீ...!
கஷ்டதிற்காக காசு சேர்க்க...!
நான் விமானம் ஏறும்போது விசும்பி...
விசும்பி...! விம்மியழுதவளும் நீ..!
நான் இங்கு உழைத்து பணம் அனுப்பி,
முதல் போன், பேசிய முதல் நிமிடம்..
முத்தமிட்டு நலம் விசாரித்தவளும் நீ...!
நடிப்புகளும்..உம்துடிப்புகளும்..!
பொய்களும்..உம்செய்கைகளும்...
என் சந்தோசத்திற்காக..
என் செவிவழிகளுடே...
இரண்டு வருடம் விசா முடிந்த ஆனந்தத்தில்,
அடுத்த நாள், உன் இறந்த செய்தி காதில்விழ,
ஐயோ-வென விழுந்தேன்..!
மொத்தமாய் இழந்தேன்..!
அன்று முதல், இன்று வரை...
தனிமையில் அழுகிறேன்..
உறவுகள் இல்லாமல் அல்ல,
உன் அன்பு காணாமல்..
நீ..! இறந்ததால் அல்ல....!
உலகில் பாசமே! இறந்ததால்..!
இன்னும் தாய்யின் பாசம் தொடரும்....
இருந்தும்..!
தயவு செய்து உங்கள் காலில் விழும்
மதுரை வாசகத்தின் வைர வாசகம்...!
முதியோர் இல்லாத்தில் சேர்க்காதே...!
யாரும் இவ்வுலகில் கொடுக்கமுடியாத,
பாசத்தை தாயிடமிருந்து இழக்காதே...!
அன்புடன் உங்களுடன் உயிரில்கலந்த...
சமூகக்காவலன் மதுரை கருப்புவாசகம்...