சின்ன சின்ன ஆசை

...சின்ன சின்ன ஆசை.....

நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகள்
நிறைய என் மனதில்....

வானத்திற்கும் பூமிக்கும் வெள்ளி மணியில்
கோர்த்துவிட்டது போல் பெய்யும் மழையை
ரசித்திட ஆசை.....

பனித்துளியாய் தூறும் மழைத்துளியில்,
அண்ணாந்து பார்த்து முகத்தில் விழும்
துளிகளை நாவில் ருசி பார்த்திட ஆசை....

மழைபெய்து ஓய்ந்தவுடன் வெளியே புல்தரையில்
காலாற நடந்து செடிகளின் கிளைகளை ஆட்டி
அதிலிருந்து சிதறும் மழைதுளியினில்
நனைந்திட ஆசை.....

இதையெல்லாம் நான் பரவசமாக செய்திடும் கோலத்தை
கோபத்துடன் முறைத்து பார்க்கும் அம்மாவின்
கழுத்தை செல்லமாக கட்டிப் பிடித்து முத்தமிட ஆசை...

தானாக ஏற்பட்ட விளையாட்டுத்தனமான ஆசைகளை
நானாக செய்வதற்கு மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு
போய்விட வேண்டுமென்று கொள்ளை ஆசை....

ஆனால் ......

வாழ்க்கையின் பின்னோக்கிச் செல்லும் கடிகாரத்தை
எவரும் இன்னும் கண்டு பிடிக்கவில்லையே........ !!!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (5-Sep-13, 8:58 am)
Tanglish : sinna sinna aasai
பார்வை : 703

மேலே