நல் வழியே
வாழ்ந்து விட்டான் பூ மனத்தோடு
வாழ்கிறான் நல்ல எண்ணத்தோடு
நடுவிலே சில தடுமாற்றங்கள்
எல்லோருக்கும் வருவது தான்
வந்தது அவனுக்கும்
நாட்டம் பணத்திலே வந்த போது
சற்று நிலை மாறினான்
பணத்திற்கு அடி பணியாதவர்கள் யாரும் இல்லை
போனான் அதன் பின்னால்
விழப் போகும் காலத்தில்
சட்டென்று விலகினான் அம்மாயையிலிருந்து
திரும்பினான் தன வழியில்
எது நல் வழியே அதவே நிலைக்கும்