+தத்தக்கு பித்தக்கு+

தத்தக்கு பித்தக்கு தாத்தா!
தத்தக்கு பித்தக்கு பாட்டி!
எனக்கு புடுச்ச தாத்தா!
எனக்கு புடுச்ச பாட்டி!

கதைகள் சொல்லும் தாத்தா!
பாட்டு சொல்லும் பாட்டி!
கூட ஆடும் தாத்தா!
சோறு ஊட்டும் பாட்டி!

தாத்தா யானை ஏறி
வீடு பூரா சுத்துவேன்!
பாட்டி மிட்டாய் தரலேன்னா
வாலு வாலுன்னு கத்துவேன்!

தாத்தா சொன்னா ரைட்டு!
பாட்டி எப்பவும் கரெக்டு!
தாத்தா எனக்கு காந்தி!
பாட்டி பேரு சாந்தி!

எனக்கு புடுச்ச தாத்தா!
எனக்கு புடுச்ச பாட்டி!
தத்தக்கு பித்தக்கு தாத்தா!
தத்தக்கு பித்தக்கு பாட்டி!

(குறிப்பு: சிறுவர் மலரில் வெளிவந்த எனது பாட்டு)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Sep-13, 8:32 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 53

மேலே