+ஒரு மழை நாள்!+
சில்லென்ற பெருமழை வெளியே
சிந்தனை தூண்டச் செய்யும்!
திகட்டாத தின்பண்டம் உள்ளே
எந்தனை மயக்கச் செய்யும்!
பெய்யாததால் பெய்தது மழை!
மனதினில் அடித்தது அலை!
பேச்சுவாக்கில் கிடைத்தது பண்டம்!
நாக்குவாக்கில் அடித்தது யோகம்!
மழைக்குப்பின் கிடைத்தது அமைதி!
ஒதுங்கியோர்நடக்க கிடைத்தது அனுமதி!
உண்டபின் கிடைத்தது உறக்கம்!
உண்மையில் கிடைத்தது கிறக்கம்!
சாலையெங்கும் நீர்போட்ட கோலங்கள்!
மாலைபோல நீர்வரைந்த ஓவியங்கள்!
மாலையில் இதமான தேநீர்!
உள்ளத்தில் தெளித்திடும் பன்னீர்!
சூரியன் இப்போதூங்கப் போனது!
நிலாவும் வானில்நீந்திப் போனது!
சிந்தனை சிறக்க வழிவகுத்தது!
சீருடன் கவிதை எழுதவைத்தது!