இனிய ஆசிரிய தின வாழ்த்துக்கள்.....!

அறிவினையும் பணிவினையும் பயில
அருகிலுள்ள பள்ளிக்குச் சென்றேன் - அங்கே

அன்பினையும் பண்பினையும் பழக்க
ஆசிரியரும் ஆசிரியையும் இருந்தனர்

அவர்களை பணிந்து தொழுது நான்
அழியாத ஒழுக்க நெறி கற்ற பிறகு - ஆர்வமுடன்

ஆண்டவனை காண ஆலயத்துக்கு சென்றேன்
அங்கு நடந்த உரையாடல் இதோ : -

ஆன்மாவை எப்படி சுத்தம் செய்தாய் அரிகரா ?
என்றார் ஆண்டவர்

ஆசிரியர் கற்றுத்தந்த பாடத்தால் ஆண்டவரே.....!
என்றேன் நான்

ஆஹா ஆனந்தம் ! அவருக்கு நன்றி சொன்னாயா ?
என்றார் ஆண்டவர்

அவர்கள்தான் உனைப் பார்க்க வழி சொன்னார்கள்
என்றேன் நான்....

இப்படியாக எனது உரையாடல் எனது
இதயத்தோடு தொடர்ந்து கொண்டிருந்தது.......

இனிய ஆசிரியப் பெருமக்களே
இன்று என் இதயம் - நீங்கள் கற்றுத் தந்த
இனிய வேதங்களால்
இன்பமாக இருக்கிறது - அதற்காக

உங்கள் அனைவருக்கும் எனது

நன்றி
நன்றி
நன்றி

இனிய ஆசிரிய தின வாழ்த்துக்கள்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Sep-13, 8:19 am)
பார்வை : 54

மேலே