[494] நல்லறிவின் உழவர்களைப் போற்று வோமே!

ஏட்டினிலே இருப்பதையே எடுத்துச் சொல்லி
=எக்கேடும் கெட்டுப்போ என்றி ராமல்
கூட்டினிலே மகிழ்ந்திடவும் குறிக்கோள் தன்னைக்
=கூடிவரும் மாணவர்க்குக் காட்டி நின்றும்,
ஆட்டபாட்டம் இருந்தாலும் அறிவுத் தாகம்
=அமைந்தவொரு பருவத்தின் அழகை யூட்டித்
தோட்டமிந்த உலகிதிலே மலர்கள் நீங்கள்
=தொடர்ந்துமணம் வீசுமென அனுப்பி வைக்கும்
நாட்டமெலாம் நன்மைக்காய் நாடு யர்த்தும்,
=நல்லறிவின் உழவர்களைப் போற்று வோமே!
வாட்டமிலா இளைஞரினம் வளர நாடும்
=வளருமென அவர்பணியை வாழ்த்து வோமே!
======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (5-Sep-13, 8:12 am)
பார்வை : 48

மேலே