ஆசிரியர் தின வாழ்த்து!
கரு கலையாமல்
சுமப்பவர் அன்னை!
கல்வி கலையாமல்
கற்பிப்பவர் ஆசிரியர்!
அன்று
தலையில் நாலு தட்டுதட்டி
முன்னுக்கு கொண்டு வரவேண்டும்
என்றனர்!
இன்று
கம்பு எடுத்தால்
கம்பி எண்ணுவாய்
என்கின்றனர்!
எங்கே போகிறது நம் கல்வி!