திருநங்கையின் கடைசி ஆசை

கடவுளிடம் வேண்டுகிறேன்:
தாயின் வயிறு
பெருத்து...!
வலி எடுக்கும் முன்
வலியோடு...!
தங்கைக்கு முன்
திருநங்கையாக
வெளிவந்தேன்...!

குழந்தையாக
இருந்தேன்
குதுகலத்தொடு,
குங்குமச் சிவப்பாக
சிலிர்த்தேன்...!

சிரித்து
சிறுவனாக
பள்ளி
பயின்றேன்...!

புன்னகையில்
புயல் வீசியது
உடல் மாற்றம்
நளினம் கண்டேன்...!

நடு ராத்திரியில்
விழித்திரை
ஓரமாய்
கரு மை
பூண்டேன்...!

பார்வையில்
பணிவு
நடையில்
நவரசம்
கூடியது..!

உடலால்
ஆணாகி
உள்ளத்தால்
பெண்ணாகி
உமையானேன்
உலகத்திற்காக..!

வேஷம் கண்டு
பெத்தவர்கள்
பேய் என்றும்
தங்கை
சாக்கடையில்
பூத்த பூவென்றும்
பழித்து
வெளியேற்றி
கதவடைதார்கள்...!

வேலை கேட்டேன்
கேலி பார்வையால்
நசுக்கப் பட்டேன்..!
உள்ளம்
கிள்ளினார்கள்...!
என்னுடல்
ஆனவர்கள்...!

என் உள்ளம்
வெள்ளை தான்
தண்ணீருக்கு
தெரியுமா
வயிற்று பசி..!

எச்சில் இலை
தேடி பிடித்து
கையில் எடுத்து
மயக்கமானேன்...!

கண் திறந்தேன்
உடல் மருத்து
நூறு ருபாயில்
உடையணிந்து...!
ஒருவனுக்கு
உணவாயிருந்தேன்,..!

கண்ணீர்
பனிக்கட்டி ஆகின
இரவு நேரங்களில்..!

வாழ்வை
இழந்து
நிம்மதியற்று..!
நோயிக்கு
விருந்தானேன்...!

கடைசி ஆசை
கடவுளிடம்...!
என்னுயிர் பிரிந்து
எலும்புகள்
எறும்பரித்தப் பின்...!

ஆணும்மில்லாத
பெண்ணும்மில்லாத
உடல்...!
பூமிக்கு
வேண்டாம்...!
நேரடியாக
நரகத்தில்
படைத்து
விடுங்கள்...!

மூன்றாம்
பாலினமாக
வாழ்ந்து
மடியட்டும்
நிம்மதியாக...!

*****கே.கே.விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (5-Sep-13, 7:39 am)
பார்வை : 115

மேலே