+சிந்தும் கண்ணீரெல்லாம்...+
சிந்தும் கண்ணீரெல்லாம்
சிதைந்துபோக அல்ல!
மண்ணின் உரமாகி
விண்ணைத்தொடும்
விருட்சமாகும் ஒருநாள்!
வஞ்சித்தோரை
அன்று யாராலும்
காப்பாற்ற வழியில்லை!
வன்மையான தண்டனைக்கு
உட்படுத்தப்படும்போது
கெஞ்சிப் பயனில்லை!
இன்றே திருந்திவிடு!
சிந்தும் இரத்தமெல்லாம்
காய்ந்தொழிய அல்ல!
சிந்தையில் நிலைத்து
வரும் தலைமுறைக்கு
வீரம் கொடுக்கும் விழுதாகும்!
வளர்ந்து நிற்கும் ஆலம்விழுதை
சிதைக்கவும் முடியாது!
அடக்கவும் முடியாது!
சூடுபட்டு கொட்டுபட்டு
சுருண்டுகொள்ள வேண்டியதுதான்!
கொக்கரிப்போரே எரிந்துஅழிவாய்!
சீக்கிரம்வரும் அந்தநாள்!