வெறுங்கூடம்

ஒற்றை பனைமரம் நிழல் இன்றி
ஒதுங்க ஒன்றி நிற்கும்

மலை உச்சியில்
அடித்த சாரல்
மழைக்கு
சொந்தம் கொண்டாடும்
காற்றும் மேகமும்

தன் ஆசை , நலம் கருதி
செயலாற்றுபவனுக்கு தெரியாது
ஆசை என்னும் சுத்தியல்
ஆணி போல்
அடித்து
அடிமை படுத்தும் என்று

அன்பு இல்லாதவனின் நெஞ்சம்
கூடு மட்டும் கொண்ட மனிதன் வாழும்
காடு

அன்பு அற்றவனின் உடல்
கூடை அமைந்த வெறுங்கூடம்......

எழுதியவர் : செல்வா (5-Sep-13, 7:35 am)
சேர்த்தது : selva.sharapova
Tanglish : thallaaduren
பார்வை : 41

மேலே