யார் அந்த கவிஞன் -கவிஞர் அ சு
தலையணையில் தலை சாய்ந்து
தனையே தான் மறந்து ..
ஒரு கணம் இமைகள் மூடி
துயிலை தூரம் வைத்து ..
சிந்தனையை சிறை வைத்து ..
நினைவுகளை நிலைப்படுத்தி ..
மாசற்ற மனக்கண் திறந்து ..
கனாவில் கண்ட காட்சிக்கு
வினா நூறு கேட்டு..
விடை எழுத விண்ணப்பித்து
விடியும்வரை விழித்திருந்து ...
சீர்கொண்ட சிந்தையை கந்தலாக்கி
காகிதங்கள் கசக்கி பிழிந்து ..
சிற்றுளி கொண்டு சிற்பமாய் செதுக்கி...
வர்ணனை செய்த வரிகளுக்கு
வர்ணம் தீட்டி ..
வலிகள் கொண்ட வரிகளுக்கு
வலிமை சேர்த்து ..
எழுச்சி மிகு வார்த்தைகளுக்கு
உணர்சிகள் ஊட்டிவித்து ...
எழில்நடை எழுத்துக்களை
வீரநடை போட வைத்து ...
எதுகையும் மோனையும் இணைசேர
அந்தம் வரை சந்தமது சிந்தாமல்
அசை பிசையாது இசை அமைத்து ..
உச்சரிக்கும் வரிகளுக்கு உயிர் கொடுத்து .
நச்சென்ற வரிகள் தந்து ..
சமூக நச்சுக்களை அழித்திடவே!
நாளும் எழுதிடுவோம்
நல்லதொரு காவியமே! ..அதை
நாமே எழுதிடுவோம்
நாளைய காவியமாய் ..
யார் அந்த கவிஞன் ?
வாழும் கவிஞன் ...
நாளும் இளைஞன் ..
- அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )