பிரியா பி.ஏ

ஜூன் 26, கல்லூரி முதல் நாள் கண்களில் கனவோடு பலரும் காலவதியான படிப்பென கருதும் பி.ஏ (பொருளியல்) விருப்பப் பாடமாய் தான் படிக்க தேர்வு செய்தேன், மனதோரம் சிறு படப்படப்பு, காரணம், அந்த படிப்பும் காத்திருந்தே கிடைத்தது. அரசு கல்லூரி என்பதால் கட்டணத்தில் கடினமில்லை 821 ருபாய் எனினும் அதையும் கட்ட அக்காவின் பங்கு தேவைப்பட்டது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மிடில் கிளாஸ்க்கே உண்டான சாபக் கேடு ஒருவரின் தியாகத்தில் தான் மற்றொருவரின் பயணம், அன்னையின் அன்னத்தில் ஆரம்பித்து ஆசைப்பட்ட படிப்பு வரை அப்படித்தான்…!
என்னைவிடவும் படிப்பில் நாட்டம் அதிகம் அவளுக்கு எனினும் விதியின் விளையாட்டு +2 முடிக்கும்முன்னே வேலையிழந்த தந்தை, வாடகை வீடு , குடும்ப பாரம் அவள் தலையில் படிப்பைத் துறந்து பணியை நோக்கிய அவள் பயணம், விழிகளில் நீர், வெறிச்சோடும் கனவுப் பாதை அவள் கடந்தது ரத்தினக் கம்பள பாதையை அல்ல, முட்களும், கற்களும் முண்டிய பாதையை தான், 16 வயது பள்ளி முடித்த பருவம் பணிக்கென நகர்கையில் காணும் விஷயம் யாவும் நிச்சயம் கன்னுகினியவையல்ல காண தகுந்தவையும் அல்ல கண்டால் , சென்றால் , காணா சோகம் காணுகையில் கண்ணிரண்டும் ஒளியிழக்கும், இடை மெலிந்து எடை இழக்கும், அவளும் இழந்தால் இருந்தும் தொடர்ந்தாள்…!
மிடில்கிளாஸ் வாழ்க்கையில் அனைத்துமிருக்கும் காலியாக, இங்கு யாரும் நிரந்தர குற்றவாளியல்ல சூழ்நிலை கைதிகளே தனது 17 வயதிலிருந்தே வேலை செய்யும் தந்தையின் குற்றமோ இல்லை, 16 வயதிலிருந்து குறைந்த வருமானத்திலேயே நெடுநாளாய் குடும்பம் நடத்தும் தாயின் குற்றமோ இல்லை இவ்வீட்டில் மூவராய் பிறந்தது எங்களின் குற்றமோ யாரை சாடுவதென அறியாமல் இல்லா விதியின் இறுக்கத்தில் இளைபா றுகிறோம்.
ஜூன் 25 மாலை மசியும் வரையிலும் அடுத்தடுத்து அணிய எடுத்து வைத்த ஆடை ஆறை தாண்டவில்லை என் செய்ய படிக்கத் தான் செல்கிறோமாயினும் பார்த்தணிய வேணாமா ஆடையை ஆயிரம் எண்ணங்கள் அலைப் பாய்ந்தாலும் அடுத்த நாள் அணிய மட்டும் ஆடையிருந்தது கையோடு அதையெண்ணி நன்றி தெரிவிக்கலாயினேன், என்ன பெருமித பிரார்த்தனையென எண்ணினானோ என்னவோ எண்ணி 5 நிமிடங்களில் கதவு தட்டும் ஒலி திறக்கையில் அத்தை மகள் எனக்கு அக்காள் உறவு, தாய் வழி சொந்தமது அம்மாவின் குடும்பம் சற்று பெரியது தான். கோதண்டம் - காஞ்சனா தம்பதியருக்கு 5 மகள்கள் கடைசியாய் ஒரு ஆண்; ஆண் பிள்ளையை மட்டுமே கோரும் காலமது ஆண் பிள்ளைக்காய் எடுத்த படையெடுப்பில் 5 பெண் குழந்தைகள் இவர்களுக்கு, பெரிது தாத்தாவின் குடும்பம் மட்டுமல்ல மனதுமே கைம்பெண்னான தங்கை மகளையும், தாயையிழந்த அண்ணன் மகனையும் சேர்த்து 6 பெண், 2 ஆணென மொத்தம் 8 குழந்தைகளை கொண்ட சிறு பள்ளிக்கூடமென வீட்டை மாற்றியிருந்தார்.
கதவோரம் கையில் இரு பை சற்று கனத்ததோ என்னமோ நுழைந்தவள் வாசலிலேயே வைத்து பெருமூச்சு வாங்கியவள், முழுவதும் வாங்கும் முன்னே நலம் விசாரித்தால் அதோடு கல்லூரி சேர்க்கை குறித்தும் ஆரம்பித்தால் காரணம் அந்த வருடம் தான் அவளும் நான் சேரவிருந்த கல்லூரியில் 3-ம் வருடம் முடித்திருந்தால், ஒல்லியான உருவம், மாநிறம் , கிராமத்து நடை , அவளின் தந்தைப் போன்று உதவும் குணம்.
அவள் ஓரிரு முறை அணிந்த ஆடை ஒன்றில் , புதிதாய் எடுத்த ஆடை ஒன்றிலென எண்ணி 15 புது ஆடை என்ன சொல்ல சிந்தனையிலும் கேளவில்லை நான், போதுமென்ற குணத்திற்கே இறைவனின் கொடை என்று எங்கயோ கேட்ட வாக்கியங்கள் எனை வட்டமிட என்னை சற்று உலுக்கியவளாய் புன்னகைத்தால் தேவையை தேவைப் படும் நேரத்தில் தீர்பவர்கள் தெய்வங்களாகவே தெரிவர், அவளும் அப்படிதான் தெரிந்தால் எனக்கு அத்தருணத்தில், பெரிதாய் காட்டிக் கொள்ளவில்லை அவளிடம் இருந்தும் நிறைந்த கண்களில் அறிந்திருப்பாள், அவளும் எதிர்காலத்துக்கென கொஞ்சமும் அவள் இறந்த காலத்தை எண்ணி கொஞ்சமும் அறிவுரைக் கூறி அகன்றாள்.
பொதுவாக வீட்டில் கல்லூரி சேரவிருக்கும் இளைஞனோ, இளம் பெண்ணோ சந்திப்பது பெரும்பாலும் அறிவுரைகளைத் தான் காரணம் இரண்டுமற்ற வயதது எளிதில் எதையும், எதையும் ஏற்கும் துறக்கும், தடம் மாறவும் நேரிடும் அதையெண்ணியே இந்த அறிவுரை மழை நமக்கு இவ்வளவு அறியும் இவர்கள் ஏன் அறிவதில்லை அறிவுரையும் நமக்கு அலுப்பையே உண்டாக்குமென.
அவர்களின் சந்தேகம் நம் மீது அல்ல நம் வயது மீதே வாழ்வின் வசந்த காலம் இந்த இளமைப் பருவம் காணும் அனைத்தும் கண்களுக்கு விருந்தென, சோகமும் தோழமையில் மாறும் அதிசயம், நண்பர்களின் அரவணைப்பு என பூந்தோட்டமாய் இருக்கும் நம் வனம் அத்தோடு இருந்திருந்தால் இத்துனை துயர் யாருக்குமில்லை. பெற்றோரின் அதிக பட்ச கண்டிப்பும் குறைந்தப் பட்சம் கூட இருந்திராத நம்பிக்கையுமே நம்மை தவறுதலாய் வழி நடத்துகிறது. ஆம் பாலின ஈர்ப்பு ஓரின பிராணியிலிருந்து ஆறரிவு மனிதன் வரை ஒன்று தான் மாற்றமில்லை.
ஆண் சிநேகிதம் ஆறு வயதில் தொடங்கி அறுவது வரை இன்னமும் சர்ச்சைக்குரியதுதான் ஆயினும் கூடுமானவரை கூடியிருக்கத்தான் முயற்சிக்கிறோம் ஏதோ ஒரு புள்ளியில் தான் இந்த இளஞ்சுகளின் மனதில் புதியதொரு உறவுக்கு வேர் விடுகிறது. அந்த சாமியும் இந்த ஆணையும் பெண்ணையும் படைத்தது சேர்வதற்கு தானே இருந்தும் இந்த பெற்றவர்களின் கட்டுகளும் இவர்களின் வரையறைகளும் புரிவதில்லை இளஞ்சுகளுக்கு. எதையென்னி நமக்கு முட்டுக்கட்டைப் போடபட்டதுவோ அதையென்னியே முட்டி நிற்கும் இந்த இளமனது. இது இன்னது என அறியும் முன்னே ஆழம் ஏறிய ஆறென ஆகிறோம்... உறவுகள் புரியும் முன்னமே பிளவுகள் ஆரம்பிக்கிறது.
எனக்கும் போதும் போதும் எனும் அளவுக்கு அறிவுரைக் கிடைத்தது. உள்ளர்த்தம் புரிந்தாலும் கேட்டதையே கேட்கையில் உதறித் தள்ளத் தான் செய்கிறது உள்ளம். இவ்வளவையும் இதயத்தில் ஏற்றித் தான் இறங்கினேன்.
- தொடரும்....