priyalakshmi126 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : priyalakshmi126 |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 15-Nov-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 427 |
புள்ளி | : 62 |
தமிழ் மீது தணியா தாகம் கொண்ட தாரகை !!!
யாராரோ எதையோ தேடி தினம் தினம் ஓடிகொண்டிருக்க நம்மிடையே தேங்கிய குலமென ஏங்கி நிற்கும் இந்த மன நலம் குன்றியவர்களை ஏறிட்டுபார்போர் நம்மில் எத்தனை பேர்??? அப்படியே பார்த்தாலும் ஒரு நிமிட பிராத்தனையை தவிர வேறு என்ன பெரிதாக செய்திட இயலும் அடுத்த வேலை உணவிற்காக ஓடும் இந்த யந்திர வாழ்வில்.
ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உண்டு இந்த சேவையில், எனினும் நம் தேசம் பாத்திரத்தில் அடக்கிட குடி நீர் அல்லவே பரந்து விரிந்திருக்கும் பார்க் கடல், ஆகவே அரசாங்கம் தனது நேசக் கரங்களைக் கொண்டு வீதி தோறும் வீணாக்கப்படும் இந்த இயலாதவர்களை அரவணைக்க வேண்டும்....
ஏதோ ஒரு நாள்
ஏதோ ஒரு நிமிடம்
ஏதோ ஒரு தருணம்
புரட்டிப் போடப் படும்
நம் வாழ்கையின் மாற்றத்திற்கு
இங்கு வந்து போனவர்களால்
இடப்பட்ட பெயர்
காதல்…!!!
வாழ்ந்தவர்களால் வாழ வைக்கப்பட்டது
விழ்ந்தவர்களால் விமர்சிக்கப் பட்டது
வென்றவர்களால் பூஜிக்கப்பட்டது
வெறுத்தவர்களால் ஏசிக்கப்பட்டது
கைவிடப்பட்டவர்களால் கழுவறை ஏற்றப்பட்டது
எத்துனை செய்யினும் இத்துணையின்றி இயலாது புவி
பூவுக்குள் பூகம்பமாய்
புயலுக்குள் பூச்செண்டாய்
பூவுலகில் புகும் இந்த புது உணர்வு
பூக்களை பூசிக்கவும் ஏசிக்கவும் புணர செய்கிறது
வசந்தத்தில் வரும் வண்டுகளையோ வாழ்வின்
மலைக்கோ மடுவிற்கோ மாற்றம் செய்கிறது
பற்பல மாற்றங்கள் பர
நீ மறந்ததாய் சொல்வது அலைபேசியென்னை
மட்டுமல்ல என் அன்பையுமே....!
அலைகழிக்கத் தான் அழைத்தாயோ - கேட்கிறது
அலைபாயும் என் மனம்…!
அறிவாயோ என் அறைதனில் - உன்
வாசம் தனை…!
அச்சுபிறழாமல் உறக்கத்திலும் - உச்சரிக்கும்
உன் பெயர்…!!!
எனை உருகுலைக்கும் உன் - ஒரு
நொடி மௌனம்….!!!
உன் விழி திசைக்காக - எதிர்நோக்கும்
என் வினாடிகள்…!!!
அறையை அளந்து நிற்கும் - உன் விழிகளை
வருட விரையும் என் விழிகள்…!!!
தொடருவதால் தான் தூரம் போகிறாயோ என் தூயவனே!!!
தொடும் துணிவும் விடும் நினைவும் இல்லை இவளிடம்!!!
கரையும் பிறையோ தொடரும் கதையோ!!!
வழியும் உயிர் வடிந்து முடியும் முன்னே
வருவாயோ