காதல்

ஏதோ ஒரு நாள்
ஏதோ ஒரு நிமிடம்
ஏதோ ஒரு தருணம்
புரட்டிப் போடப் படும்
நம் வாழ்கையின் மாற்றத்திற்கு
இங்கு வந்து போனவர்களால்
இடப்பட்ட பெயர்
காதல்…!!!
வாழ்ந்தவர்களால் வாழ வைக்கப்பட்டது
விழ்ந்தவர்களால் விமர்சிக்கப் பட்டது
வென்றவர்களால் பூஜிக்கப்பட்டது
வெறுத்தவர்களால் ஏசிக்கப்பட்டது
கைவிடப்பட்டவர்களால் கழுவறை ஏற்றப்பட்டது
எத்துனை செய்யினும் இத்துணையின்றி இயலாது புவி
பூவுக்குள் பூகம்பமாய்
புயலுக்குள் பூச்செண்டாய்
பூவுலகில் புகும் இந்த புது உணர்வு
பூக்களை பூசிக்கவும் ஏசிக்கவும் புணர செய்கிறது
வசந்தத்தில் வரும் வண்டுகளையோ வாழ்வின்
மலைக்கோ மடுவிற்கோ மாற்றம் செய்கிறது
பற்பல மாற்றங்கள் பரவலாயானலும் பாழும் மானுடம் இன்னும்
பழகத் தான் செய்கிறது இந்த பாசத்திற்காய்!!!

எழுதியவர் : பிரியா (17-Dec-13, 3:25 pm)
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே