என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -7

கால்நூற்றாண்டு காலமாய் அடிக்கடி
கடற்க்கரையினை கடந்து செல்லும்
வாய்ப்பு கிடைக்கபெற்றும் ,
அந்தோ ஓர் நாளும்
கண்ணையும் நெஞ்சையும் ஒன்றாய் கவர்ந்திடும்
இக்கொள்ளை எழில் காட்சியினை
அற்பன் நானும் கண்டதில்லை
காணும் பாக்கியம் கொண்டதில்லை ,,

அழகினில் மதிமயங்கி , ஆர்வமிகுதியினில்
எந்த அரவம் தீண்டியதோ
தெரியவில்லை ??
நீளக்கடல் முழுவதுமாய்
இத்தனை நீலம் பரவிக்கிடக்கின்றதே !!!

அடடா, ஈதென்ன அதிசயம் !!
முன்னின்று, பலர் முகம் பார்த்து போயினும்
உன்னை முன் பார்த்திடின் ,
பதியும் நின் பிம்பத்தினை மட்டும்
சிலநேரம் சிறைபிடித்து வைத்துகொள்ளும்
நின் காதல்ரசம் நிறைந்திட்ட என் மனதினை ஒத்த
பாதரசம் படிந்த உன் வீட்டு கண்ணாடியினை போல
காதல் வண்ணமும் ,கடலின் வண்ணமாய் உள்ள்வாங்கி
நீல வானமாய் பிரதிபலிக்கின்றதோ ???

எழுதியவர் : ஆசை அஜீத் (5-Sep-13, 6:11 pm)
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே