விலையேற்றத்தின் விகார முகம்

விலையேற்றத்தின் விகார முகம்
விரவி எங்கும் பயமுறுத்தும்
பாமரனின் பார்வைமறைத்து
பஞ்சு பறக்கும் ..பசி மயக்கம்
ஒட்டிய வயிறும் வற்றிய முலையுமாய்
ஓய்ந்து கிடக்கின்ற துயரம்
வறண்ட பாலைவன க் கண்கள்
தொலை நோக்கு பார்வை இல்லை
தொலைந்து போன பார்வையோடு
இளைய பாரதம்
பசியால் அழுதழுது
குரல் இழந்த குயில்கள்
வேலையின்றி வெறுத்தலை ந்து
மலிவு விலை மது க் கடையில்
மல்லாக்க கிடக்கும் மனிதன் .
அலை மோதி ..தலை மோதி
அல்லல் படும் அவலம்
எலும்பான இளவலுக்கு
எமனின் பாச க் கயிற்றில் தொட்டில் கட்டி
எண் சான் வயிற்றுக்கு ஈவான் நாளையென்று
ஏங்கி ஏமாறும் ..இளந்தாய்கள்
பசியும் பட்டினியுமாய்
பரிதவிக்கும் பாரத த் தாய்
விலையேற்றத்தின் விகார முகம்
விரவி எங்கும் பயமுறுத்தும்
பரவி எங்கும் பரிகசிக்கும்

எழுதியவர் : ஏ.பி .சத்யா ஸ்வரூப் . (5-Sep-13, 8:07 pm)
பார்வை : 87

மேலே