அவளுக்காக நான்
காதல்என்ற ஒருமொழி
கண்டு
வார்த்தைகளை கோர்த்து
நீவரும் பாதையில்
தூவிவைத்தேன்.
கண்கொண்டு உன்னைபார்த்த
நொடி
கண்கலங்கி நிற்கிறேன்.
ஏற்றுக்கொள்வாயா என்காதலை
என்று
ஏங்கி கொண்டுஇருக்கிறேன் .
புன்னகையாவது உதிர்வாயா
இல்லை
பார்வையாலே இதயத்தை
துண்டாக்கி செல்வாயா.
இதயத்தில் விதையாய்
விழுந்த
என்காதல் இன்று விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறது.
எப்போது வருவாய்பெண்ணே
அந்த
நிழலில் இளைப்பாற.