ஒரு கோடி பிரிவுகள்........
தொலைந்த
பாதையை
தேடிப் பறக்கும்
பறவை
புது பாதையை
விதைத்தபடியே
தொலைகிறது....
தொலைவதில்
சுகம் கொண்ட
பயணத்தில்
காத்துக் கிடக்கிறது
கவலையின் சின்னமாய்
மைல் கல் ஒன்று....
மனமெங்கும்
ஜன்னலாய்
திறந்து கிடக்கிறது
கவனம் கலைத்தவளின்
பாத சுவடுகளின்
பார்வைக்காய்......
தூர தேசம்
செல்ல முடிவெடுத்த பின்
புன்னகை வாசத்தில்
புதிர்களின் சாகசம்....
ஒற்றை பனை
மரத்தடியில்
ஒற்றைக் காலில்
நிற்கும் கொக்காய்
உள்ளூர கிறங்குகிறது
ஒரு கோடி பிரிவுகள்....
அவளை தொலைப்பதில்
கண்டு பிடிக்க படாமலே
போகிறேன்....
நான்...