மழலை செல்வங்கள்

நம் வீட்டில் மழலை செல்வங்கள்
கவலை மறக்கும் உள்ளங்கள்

உரிமையோடு பெருமையாக
உலா வரும் வீட்டின் நிலவுகள்

மகன் வழி மகள் வழி உறவு
மாறாத பாசம் கொண்ட கனவு

உறவாக இதயங்கள் தோறும்
அறிவான பேச்சுக்கள் கூடும்

தன் பிள்ளைகளை வளர்த்த கனவு
பேர பிள்ளைகள் தரும் நினைவு

உறுதுணையாய் வழி நடத்தி வரும்
உரிமையாய் வாரிசின் பந்தம்

பாசத்தோடு அரவணைப்பு கூடும்
உவமையாய் கேள்வி கேட்கும்

மாறாத பாசம் இது நமக்கு – இந்த
முதுமையில் துணை இது இருக்கு

நம் சந்தோசம் வாழும் நாள் வரை
மழலை செல்வம் பாசத்தின் விலை

இறுதி காலம் உறவு ஒண்ணு இருக்கு
இனி இல்லை கவலை நமக்கு

மழலை செல்வங்கள் !
முதுமையின் அரவணைப்பு !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (7-Sep-13, 11:12 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 305

மேலே