சுயநலம் சோகவலம்

என் செல்லமகளே
என் செந்தாமரையே
உன் உயிர் பிரிகையிலே
என் மனம் தாங்கலையே
கோடிமலர் புவியில் மலர்ந்தும் இங்கே
மறுநாளே வாடுவதேன்
உன்னை நான் மலராய் நினைத்து
என் மனம் தேர்த்திக்கொண்டேன்
பதினாறு வருடம் தவமிருந்து
வரமாய் பெற்றெடுத்த உன்மேல்
பூப்பெய்து மறுநாளே
கண்ணீருடன் பூச்செண்டு வைத்தேனே
நாளுக்கு ஒரு நோயென்று
நாடுமுழுக்க நோய் பரவையிலே
என் வீடு சுத்தம் என்று
நானும் சந்தோசமாய் இருந்தேனே
என்வீட்டு குப்பையே
நானும் தெருவோரம் போட்டேனே
தெருவில் பெருகும் நுளம்பால்
நானும் என் மகளை இழந்தேனே
நாமும் நம் வீடும் சுத்தமாயிருந்து
என்ன பிரயோசனம்
நம் வீடும் நம் நாடும் சுத்தமாயிருந்தால்தானே
நமக்கே நல்ல காலம்