புலம்பித் தவிக்குது ஆழ்மனது

மே மாதம் பிறந்தது....
மெல்லக் காதில் கூவியது,
நினைவுக்குயில் நீ பிறந்தது இன்றுதான் என்று....
பட்டாம்பூச்சிகள் மனதில் படப்படக்க உனக்கு
பரிசளிக்க பலவாறு பட்டியல் இட்டேன்....
" நீ என்றும் ஆராதிக்கும் தாய்தமிழில்,
நீளமாய் காதல் சொட்ட கவி படைத்திடவா?"
"நீ என்றும் விரும்பிக் கேட்கும் பாடலை,
முழுமையாக உன் காதோடு பாடிடவா?'
"நீ எத்தனை முறை கேட்டாலும் தரமறுத்திட்ட,
இனிப்பு சிற்றுண்டியை மலை போல் பறிமாறிடவா?"
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று....
பள்ளியெழுச்சிப் பாடி உன்னை எழுப்பிவிடவா..?"
" என்ன ...? உன் பார்வையின் அர்த்தம் புரிகின்றது?
"நான் இருக்கும் போது கொடுக்காத அனைத்தையும்,
நான் இல்லாதபோது பட்டியலிடுகிறாயா...? என்று
உன் பார்வையாலேயே நீ கேட்பது புரிகின்றது...
நான் என்னதான் கேட்டாலும் பதில் சொல்ல முடியாதபடி,
நான்கு சட்டத்திற்குள் உன்னைச் சிறைவைத்து விட்ட,
விதிக்கு இங்கொருவள் தனியே புலம்புகிறாளே
என்று தெரியாமாலா இருக்கும்,,,,
முகவரி கொடுக்காமல் உனை இழுத்தச்சென்றதால்,
என் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு
எண்ணிக்கையில் இமயத்ததை தொட்டுவிட்டது....
இன்னும் எத்தனை பிறந்த நாட்கள்,,,
என்னைத் தனிமையில் புலம்பிட வைக்குமோ...?
உன் பிறந்த நாளில், உன்னிடமே வரம் கேட்கின்றேன்,
உன்னை அழைத்துச் சென்ற காலனிடம்.....
என்னையும் அழைத்து வரும்படி விண்ணப்பித்திடு...
இல்லை...இல்லை... உத்தரவிடு.....!!!

**********************************************************

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (8-Sep-13, 12:40 pm)
பார்வை : 148

மேலே