உன் நல்ல எண்ணம் பற்றி....

கரு உருவாக்கி
பத்து மாதம் கருவில் சுமந்து
வலி தாங்கி
நின்ற நிலையில்
பிரசவிக்க முடியாமல்....

எந்த வசதியும் இல்லாமல்
அரசு மருத்துவமனையில்
அறுவை சிகிச்சைக்கு
உனக்காக கையெழுத்து போடக் கூட
ஆள் இல்லாமல்
குழந்தையை பெற்றெடுத்து...

ரத்த இழப்பிற்கு
மாற்று வழி இல்லாமல்....
ஒரு இட்லி வாங்கி கொடுக்க
துணை இல்லாமல்
பெற்றெடுத்தாயே உன் சிசுவை....

இத்தனை தாங்கி
ஏன் பெற்றாய்
பாதுகாப்பாக குப்பைத்தொட்டியில்
போட்டு செல்லவா??

ஒ!
நீ நினைத்திருக்கலாம்........
எல்லா அன்னையும்
தன குழந்தையை
தானே வளத்தால்
அரசு தொட்டில் திட்டத்திற்கு
யார் ஆதரவு தருவது என்று....

அதுவும் சரிதான்.........
நல்ல எண்ணம்தான்........
குப்பை தொட்டியில் கிடக்கும்
குழந்தை நான்
பாராட்டுகிறேன் உன் நல்ல எண்ணத்தை !!!

எழுதியவர் : சாந்தி (8-Sep-13, 10:50 pm)
Tanglish : un nalla ennm patri
பார்வை : 187

மேலே