@@@மிட்டாய் மிட்டாய் @@@

நித்தமும் கிடைக்கிறது நிறங்களும்
நீளமுமாய் பலவித தின்பண்டம்
நின்றுகொண்டு நீட்டிய நோட்டிற்கு

காலையில் போட்டால்
மாலையில் கரையும் கமார்கட்டும்
காலணாக்கு கிடைத்த கடலைமிட்டாய்
நாவோடு ஊரிடும் தேன்மிட்டாய்
உள்ளிருந்து ஸ் என்ற சூடமிட்டாய்

தினமும் தின்றுகொண்டே
இருக்கத்தூண்டும் சீனிமிட்டாய்
ரூபாய்க்கு நிறைய வாங்கிய சீரகமிட்டாய்
பங்குபோட்டு தின்ற பஞ்சுமிட்டாய்
புத்துணர்ச்சியோடு தின்ற புளிப்புமிட்டாய்

கைநிறைய வாங்கி தின்ற பலுங்கிமிட்டாயும்
அடித்துபிடித்து வாங்கிய ஆட்டுவத்தையும்
அலுக்காமல் தின்ற இழந்த உருண்டையும்
உச்சுகொட்டி சுவைத்த புளிப்பங்காயும்
உலர வைத்து தின்ற மாவற்றாலும்

வண்ணமும் வடிவமும் மாற
கிடைக்கிறது இன்றும் - இல்லை
சுவையென்றாலும் இனிக்கிறது
பங்குபோட்டும் காக்கா கடிகடித்தும்
அன்போடு பகிர்ந்துகொண்ட
நண்பர்களின் பள்ளிநாள் நினைவுகள்!!!

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (10-Sep-13, 12:20 pm)
பார்வை : 340

மேலே