+எழுத்துத்தோட்டத்தில் உலவும் ஏழை விவசாயி நான்!+

எழுத்துத்தோட்டத்தில் உலவும் ஏழை விவசாயி நான்!

பூவுலகில் வாழ்ந்துவந்தேன்!
விபரம் தெரிந்த நாளிலிருந்து
பல பொன்விதைகளை சேர்த்துவந்தேன்!
என்றாவது ஒருநாள் விதைக்க தோட்டம் கிடைத்தால்
விதைத்து பெரும் அறுவடை செய்து
விற்று மகிழலாம் என நினைத்திருந்தேன்!

எழுத்துத்தோட்டமும் என்னை வரவேற்றது!
ஆசையாய் ஓடி வந்தேன்!
பழைய விதைகளை மட்டுமல்லாமல்
புதிது புதிதாக பல செடிகளை நட்டு
என் தோட்டத்தினை அழகுபடுத்தினேன்!

எல்லோரும் வந்து பார்த்துச்செல்வர்!
களையெடுக்க துணை புரிவர்!
அழகாக பூத்திருந்தால் தட்டிக்கொடுப்பர்!
தோட்டம் வளம்பெற வழிபுரிவர்!
என கனவுகளோடு காத்திருக்கிறேன்!

என் தோட்டம் பார்க்க வருபவரோ வெகு சிலரே!
என்னுடைய பல பூக்களை
கவனிக்க இன்றுவரை எவருமில்லை!
என்னுடைய மிக அழகான பூக்கள் என நினைத்தவற்றை
என்னைத்தவிர எவருமே பார்க்கவில்லை!

இருந்தாலும் தினம் தினம் விதைக்கிறேன்!
பூக்களை மணம் வீச வளர்க்கிறேன்!
தேனீக்கள் சுவைக்க இனிமையான பூக்களை
வண்டுகள் விரும்பும் வளமையான பூக்களை
வாழ்நாள் முழுதும் வளர்த்துக் கொண்டேயிருப்பேன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Sep-13, 4:36 pm)
பார்வை : 82

மேலே