வறுமை
மனிதா!
வறுமை கொண்ட வாழ்வு சாபம் ..
பிறப்பால் வறுமை - விதி
இறப்பின் போதும் வறுமை -
- உனக்கு நீ செய்து கொண்ட சதி ...
உன் வாழ்வின் வளமை
உன் சிந்தையின் `வளமை சார்ந்தது.
சிந்தனையில் வலிமை சேர் .......
நித்திரை தொலைத்து விடு ........
ஆழமாய் சுவாசித்தல் செய் ............
பகுத்தறிவு கொண்ட பார்வை பார்.....
உடலை உறுதியாக்கு ............
கடவுளிடம் நிரந்தர தொடர்பு கொள் ...
உறுதியாக கூறுகிறேன் ...
உன் வறுமை மட்டுமல்ல
உன் பக்கத்து வீட்டுக்காரனின் வறுமையும்
வறுமை பெறும்...