முற்றுப்புள்ளிக்கு பின்னால் முதலெழுத்து...!
நம்மிடம்
எடுத்துச்செல்ல
ஒன்றும் இல்லை,
கொடுத்துவிட்டு
செல்ல பல உண்டு
பணத்தை தவிர...!
இத்தனை ஆண்டு காலமாக,
உள்ளதை உள்ளபடி காட்டிய
உன் கண்களை விட்டுச்செல்...!
இன்னொருவருக்கும் அது உண்மையாக
இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...!
இத்தனை காலமாக
உனக்காக துடித்த
உன் இதயம்...
நீ இறந்த பின்பு
இன்னொருவருக்காக
துடிக்கமாடேன் என்றா
சொல்லிவிடும்?????
உன் துடிப்பு
இருக்கும் வரை உனக்கு
இறந்த பின் மற்றவர்க்கு...!
முன்னதாகவே
முடிவெடுத்துவிடுங்கள்
முடிந்த பின் பயனில்லை...!
மறந்துவிடாதீர்கள்
கையில் உள்ள நாட்கள்
மிகவும் குறைவு...!
ஒரு உயிர் மறைந்தாலும்,
பலவுயிர்க்கு வாழ்வு கிடைக்கும்....!