சிரிக்கத் தெரியாதவள்

அடியே சிவரஞ்சனி !
சிரிக்கக்கூடத் தெரியாத
சிடுமூஞ்சிக் காரியே !
சிரிப்பைக் கற்றுக்கொள்ள - என்னிடம்
சிறப்பு வகுப்பு எடுத்துக்கொள் !
சிரிப்பு படிப்பில் நான்
சிறப்பு பட்டம் பெற்றவன்!
சிரிப்புக் கலையை உனக்கு
சிற்ப கலைப்போல் கற்றுத்தருகிறேன்!
அழைப்பு விடுப்பவனை
ஆத்திரத்தோடு பார்க்காதே:
அல்லல்ப்படும் என் மனது
எப்போதும் ஏங்குவது
உன் அன்புக்காகத்தான் !
காதல் பிச்சைப்போடு
கண்மூடி வாங்கிக்கொள்கிறேன் !
இப்போது நீ சிரிப்பு கலையில்
உன் குருவையே மிஞ்சிவிட்டாய் !
ஆனால் நான்
உன்மேலுள்ள காதல் போதையால்
என் பொன் சிரிப்பையே மறந்துவிட்டேன்!

எழுதியவர் : இரா.மணிமாறன், கைபேசி : (11-Sep-13, 11:33 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 62

மேலே