மரணத்தை எய்தினேன்
யாரென்று தெரியாமல் என்னுளே வந்தவளே
ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்ந்தேனடி பெண்ணே ...
நீ போகும் போது சோகத்தை
தந்தாயடி பெண்ணே ...
சோகத்தில் என் விழிகளில்
கண்ணீர் துளிகள் அருவியாய் கொட்டின,
அதில் நான் மட்டும் நனைந்து போகிறேன் ...
காதல் என்னும் புனித குளத்தில்
என் அன்பை உறிஞ்சி
குளத்தை வற்ற செய்தவள் நீதானடி பெண்ணே ...
நட்பு என்னும் குளத்தில் மீனாய் இருந்த என்னை,
காதல் என்னும் கண்ணீரில் என்னை துடி துடிக்க செய்தவளே
என் துடிப்பு உனக்கு புரியவில்லையா பெண்ணே ...
நீ இல்லை என்று அழவில்லை
உன் பொய்மையான அன்பில்
ஏமாந்துவிட்டேன் என்று தான் அழுகிறேன் ...
சோகத்தை பார்த்தது இல்லை,
உன்னால் பார்த்தேன் ...
வேதனை என்பதை நான் பார்த்தது இல்லை,
உன்னால் அதையும் பார்த்தேன் ...
மரணத்தை எண்ணி பார்த்ததே இல்லை,
ஆனால் இன்று மரணத்தை எண்ணி ,
மரண படுக்கில் விழுந்துவிட்டேன் ...
நீ என்னை பிரிந்த அந்த நொடி
நான் மரணத்தை எய்திவிட்டேன்.........