Karthi vj - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Karthi vj |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 18-Nov-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 153 |
புள்ளி | : 36 |
அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல,
நாம் பிறந்ததும் கண்ட உண்மையான பாசம்..
தோழியாய் நீ என்னை வந்தடைய
என் உயிர் தாயாய்
உன்னை நினைத்தேன்
உயிராய் நீ வந்தாய்
உயிர் தந்த தாயாய்
உன்னை நினைத்தேன்
மரணம் வேண்டாம் எனக்கு
உன் மடியில் குழந்தையாய் விளையாட
மரணம் வேண்டாம் எனக்கு
தினம் தினம்
உன்னுடன் சண்டையிட விரும்பியது
உன் அன்பை தினமும்
அழகாய் ரசிக்க
ஆசைப்பட்டதால்
அனைத்தையும்
உன்னிடம் பகிர்ந்து கொள்ளும்போது
உன் உருவில் என் அன்பு நண்பர்களை
காண்பதுபோல் ஓர் எண்ணம்
தோழியும் நீயே!
என்னை சுமந்த தாயும் நீயே!!
தோழியே! உன்னை பார்த்த அந்த நாள்
நான் என் அன்னையை காண்பது போல்
எனக்குள் ஓர் உணர்வு
நீ கூறும் அறிவுரைகள் யாவும்
என் அன்னை கூறும் அறிவுரைகள் போல்
நெஞ்சில் பதிந்தன
உன் கை விரல்கள் பிடித்து நடக்கும்போது
என் அன்னையின் கை விரல்களை பிடித்து நடப்பதுபோல்
எனக்குள் ஓர் உணர்வு
உன்னுடன் சண்டை இடும் போது
என் தங்கையுடன் சண்டை இடுவது போல்
எனக்குள் ஓர் உணர்வு
உன் மடியில் தலை வைத்து உறங்கும் போது
என் அன்னையின் மடியில் தலை வைத்து உறங்குவது போல்
எனக்குள் ஓர் உணர்வு
குழந்தையாய் உன் மடியில் பிறக்கா விட்டாலும்
நீ கட்டும் அன்பு
தாயின் அன்பு போல் தூய்மையானது
உன் வளர
யாரென்று தெரியாமல் என்னுளே வந்தவளே
ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்ந்தேனடி பெண்ணே ...
நீ போகும் போது சோகத்தை
தந்தாயடி பெண்ணே ...
சோகத்தில் என் விழிகளில்
கண்ணீர் துளிகள் அருவியாய் கொட்டின,
அதில் நான் மட்டும் நனைந்து போகிறேன் ...
காதல் என்னும் புனித குளத்தில்
என் அன்பை உறிஞ்சி
குளத்தை வற்ற செய்தவள் நீதானடி பெண்ணே ...
நட்பு என்னும் குளத்தில் மீனாய் இருந்த என்னை,
காதல் என்னும் கண்ணீரில் என்னை துடி துடிக்க செய்தவளே
என் துடிப்பு உனக்கு புரியவில்லையா பெண்ணே ...
நீ இல்லை என்று அழவில்லை
உன் பொய்மையான அன்பில்
ஏமாந்துவிட்டேன் என்று தான் அழுகிறேன் ...
அன்று சூரியனை ஏவி
என்னை எழுப்ப செய்திருந்தாள்
என் தாய்..
கட்டில் அருகே தேநீர் கோப்பையும்,
பத்து நிமிட அடுபங்கரை பிரசவத்தில்
பெற்றெடுக்கும் தன் தாய்
இல்லை என்று
அழுது ஆவியாய்
வான் ஏறி கொண்டிருந்தது..
"எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு"
என்ற கன்னனின்
கீதாசாரத்தை என்னும்போது
அவன் மேல்
பரிதாபம் தான் தோன்றியது...
அவனுக்கு தாய் இருந்திருந்தால்
அப்படி சொல்லி இருக்க
மாட்டானோ என்னவோ..
கொல்லை சுவற்றிலும்,
கண்ணாடி பேழையிலும்
சிக்குண்டு
சிரிப்பை சிந்தும்
ஸ்டிக்கர் பொட்டுகளை
பார்க்கும் போது தான்
என் தாயும்
"கூடு விட்டு கூடு பாயும்" வித்தை கற்றவள்
என்பதை அறிந்தேன்
அன்னையின் பாசம் எப்படியிருக்கும்????
அதனை அளவிட கருவி எதாவது உள்ளதா??? நான் என் தாயின் பாசம் எவ்வளவு பெரிது என்று கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று வினாவும் தன் மாணவனுக்கு ஆசான் கூறும் அறிவுறை இதோ கவிதையாய்...
புரியாத புதிர்:
உன் அன்னையின்
விழிகளை பார்த்து
வளர்ந்த நீ,
அவள் அன்பினை அறிய
வழிகள் கேட்கிறாய்.
தாய் பாசத்திற்கே
பலப்பரிட்ச்சை
நடத்தும் மகனே
முதலில் நான் கேட்கும்
கேள்விகளுக்குப் பதில் சொல்..
அருகம்புல்லின் நுனி அசைவின்
ஓசையை உன்னால்
உணரமுடியுமா????
இல்லை,
ஆலமரத்து விழுதின்
அடி நுனியிலே
அமரமுடியுமா???
உன் அன்னையின் தாயின்
தலைமுடியில் எத்தனை
நரைமுடி என
மறந்தும் அழுது விடாதே உன் கண்களின் இருப்பேன் கண்ணீராக
பெண் என்பவள் ஒரு காதல் ஓவியம்
அவளை சிறை எடுக்கும்
ஆண்களின் இதயம்
ஒரு உன்னத காவியம்...
காதல் என்பது மூன்று எழுத்துகளில் தோன்றி
வாழ்க்கை என்னும் நான்கு எழுத்தில் வாழ்ந்து
மரணம் என்னும் நான்கு எழுத்துகளில் முடியும்
உன்னத காவியம் காதல்....
பெண் என்பவள் ஒரு ஓவியம்
அவளை எழுத வேண்டும் பல காவியம்.
காதல் என்னும் அன்பு
அம்பு போன்றது
காதலர்கள் வில் போன்றவர்கள்
காதல் என்னும் போர்க்களத்தில்
ஆண்னால் எய்தப்பட்ட அம்பு
பெண்ணின் மனதை அடைந்தது
இருவரும் இரு நாட்டு வேந்தர்களாய் இருந்தார்கள்
அன்பு ஒன்றே இவர்களின் ஆயுதம்
அடிக்கடி போர்செய்தார்கள்
அது
அன்பு என்னும் போர்
சகுனியாக அவளின் தந்தை வர
இருவருக்கும் யுத்தம் ஆரம்பம்
இந்த யுத்தத்தில் ஆண் தோற்று போய்கிறான்
அவளை நேசித்ததால்
தன் உயிரையும் விட்டு விடுக்கிறான்
தோற்ற அவமானத்தால் அல்ல
ஏமாந்த வலியால்...........