புரியாத புதிர்

அன்னையின் பாசம் எப்படியிருக்கும்????
அதனை அளவிட கருவி எதாவது உள்ளதா??? நான் என் தாயின் பாசம் எவ்வளவு பெரிது என்று கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று வினாவும் தன் மாணவனுக்கு ஆசான் கூறும் அறிவுறை இதோ கவிதையாய்...

புரியாத புதிர்:
உன் அன்னையின்
விழிகளை பார்த்து
வளர்ந்த நீ,
அவள் அன்பினை அறிய
வழிகள் கேட்கிறாய்.

தாய் பாசத்திற்கே
பலப்பரிட்ச்சை
நடத்தும் மகனே
முதலில் நான் கேட்கும்
கேள்விகளுக்குப் பதில் சொல்..

அருகம்புல்லின் நுனி அசைவின்
ஓசையை உன்னால்
உணரமுடியுமா????
இல்லை,
ஆலமரத்து விழுதின்
அடி நுனியிலே
அமரமுடியுமா???

உன் அன்னையின் தாயின்
தலைமுடியில் எத்தனை
நரைமுடி என்று உன்
விரல்கள் எண்ணுமா???
ஒரு நெல்லின்மணிக் கொண்டு
ஆண்டுகள் உயிர் வாழ
உன்னால் உண்னுமா???

ஒரு நாளும் தூங்காமல்,
உடலில் ஒட்டுத்துணியும் இல்லாமல்,
இமயமலையின் இடையே
இருக்கை அமைத்து இன்பமாய்
வாழ்வது சாத்தியமா????
சல்லடைத்துவாரம் கொண்டு
கருங்கல்லினை சலிப்பதுதான்
சாத்தியமா???

இவையெல்லாம் உன்னால்
சாத்தியமானால்,
நான் சத்தியம் செய்வேன்.

வேப்பம் கொழுந்தை
வெற்றிலையாய் மாற்றி,
கடல் நீரையெல்லாம் வடித்து
உன் கைகளில் ஊற்றி,
இடியின் இடையே
ஈட்டியை எய்து
இடியை தடுத்து நிறுத்தினாலும்,
நட்ச்சத்திரக் கூட்டங்களை எல்லாம்
நாலு நொடியில் எண்ணினாலும்,
உன் தாயின் பாசத்திற்கு முன்னால்
உன்னுடைய இந்த சாகசங்கள் எல்லாம்
சறுக்குமரம் போல்
அவளின் பாதங்களில்
சறுக்கிவிழுமடா..

ஐந்திரு மாதம்
தவமிருந்து பெற்ற உன்
தாயுக்கே அவள் உன்மீது
கொண்ட காதல் புரியாதபொழுது,
ஆயரம் ஆண்டுகள் தவமிருந்தாலும்,
அவளின் பாசம்
உனக்கு என்றும்
ஓர் "புரியாத புதிர்தான்".

எழுதியவர் : இராகுல்சாரதி (29-Jul-14, 3:17 pm)
Tanglish : puriyaatha puthir
பார்வை : 325

மேலே