தோழியும் என் தாய் தானே
தோழியே! உன்னை பார்த்த அந்த நாள்
நான் என் அன்னையை காண்பது போல்
எனக்குள் ஓர் உணர்வு
நீ கூறும் அறிவுரைகள் யாவும்
என் அன்னை கூறும் அறிவுரைகள் போல்
நெஞ்சில் பதிந்தன
உன் கை விரல்கள் பிடித்து நடக்கும்போது
என் அன்னையின் கை விரல்களை பிடித்து நடப்பதுபோல்
எனக்குள் ஓர் உணர்வு
உன்னுடன் சண்டை இடும் போது
என் தங்கையுடன் சண்டை இடுவது போல்
எனக்குள் ஓர் உணர்வு
உன் மடியில் தலை வைத்து உறங்கும் போது
என் அன்னையின் மடியில் தலை வைத்து உறங்குவது போல்
எனக்குள் ஓர் உணர்வு
குழந்தையாய் உன் மடியில் பிறக்கா விட்டாலும்
நீ கட்டும் அன்பு
தாயின் அன்பு போல் தூய்மையானது
உன் வளர்ப்பு மகனாக இருப்பதுபோல்
எனக்குள் ஓர் உணர்வு