அன்பு அலையாக வேண்டும்
கடற்கரை ஓரத்தில்
காத்திருந்த காதலியே
அலைகள் ஓயாதது போல்
அன்பு அலைகள் வேண்டுமடி.
அமைதியாய் என் நெஞ்சில்
நீயும் அலைபாய வேண்டுமடி
அன்பிற்கோர் அடைக்கலமாய்
நானும் உன்னோடு இருப்பேனடி.
உலகம் அழியும் வரை
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
ஆட்சி புரிய வேண்டுமடி..