மறைந்திருக்கும் உலகம்
..."" மறைந்திருக்கும் உலகம் ""...
உறக்கத்தின் உலகமிது
வேண்டாமென மறுத்தாலும்
நம் வாசல் வந்து நிற்கும்
விழிகள் மூடப்பட்டதும்
மனத்திரை திறந்திடும் !!!
இலவச சுற்றுப்பயணம்
கடவுச்சீட்டு இல்லாமல்
கடல்தாண்டும் அதிசயம்
வசந்தத்தின் இயற்கையிலும்
பயமூட்டும் செயற்கையிலும் !!!
மறந்துவிட்ட நிகழ்வுகளில்
மலருகின்ற நினைவுகள்
கனவுகள் இந்த கனவுகள்
இதையே மாற்று சிந்தையில்
எங்கள் மூத்த விஞ்ஞானி !!!
முதன்மை குடிமகனாம்
அப்துல்கலாம் சொல்போல்
உறக்கத்தில் வருவதல்ல
உன்னை உறங்கவிடாமல்
உந்திச்செல்வதே கனவு !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...