வேளாண் போராளி நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு நினைவு அஞ்சலி

வேளாண் போராளி நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு நினைவு அஞ்சலி
~~~~~~~~~~~~~~~~~~~~
கட்டிட காட்டில்
வாழும் மக்களின்
அறியாமையை
அறியப்படுத்தவே
அவதரித்தது
இந்த புது இயற்கை
இளங்காடு
எனும் கிராமத்தில்..
வேளாண்மை படிப்பில்
இளங்கலை முடித்து
களப்பணிகளில் இறங்கி
முனைவர் பட்டமும் பெற்றார் இவர்..
தாய் மண்ணை காக்க
இனி விதைகளே பேராயுதமென்று
முழங்கிய பச்சை
முண்டாசு பாரதி இவர்..
உழவுக்கும் உண்டு வரலாறென்று
இயற்கை வரலாற்று பக்கங்களை
பச்சையால் நிறப்பிய
பச்சை விரும்பி இவர்..
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டுமென்று
வேளாண்மை காத்த
விவசாய பெருமகனார் இவர்..
மரபை அழிக்கும்
மரபணு மாற்று விதைகள்,
நெல்லைக் காப்போம்,
இராசயணம் வேண்டாம்,
எந்நாடுடையே
இயற்கையே போற்றி,
மீத்தேன் எமன் என்று
நமக்காக களமாடிய
இயற்கை போராளி இவர்..
இயற்கைகாக வாழ்ந்து
பல நற்பணிகளை செய்து
மீத்தேன் எதிர்ப்பு களப்பணியிலே
உயிர் துறந்தார் இவர்..
மண்ணுக்காக போராடி
இறுதில் மண்ணுக்கே உரமானார்
இயற்கையோடு இயற்கையாக
சுற்றுச் சூழல் சுடரொளியானவர்
நம் நம்மாழ்வார் இவர்..
இயற்கை விவசாயத்தால்
விளையும் ஒவ்வொரு பயிர்களும்
இவரின் பெயர்
சொல்லியே முளையும்.!
இவரின் உயிர்
தாங்கியே விளையும்.!
வாழ்க இயற்கை விவசாயம்..!!
வேளாண் போராளி நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்