தோழி
தோழியாய் நீ என்னை வந்தடைய
என் உயிர் தாயாய்
உன்னை நினைத்தேன்
உயிராய் நீ வந்தாய்
உயிர் தந்த தாயாய்
உன்னை நினைத்தேன்
மரணம் வேண்டாம் எனக்கு
உன் மடியில் குழந்தையாய் விளையாட
மரணம் வேண்டாம் எனக்கு
தினம் தினம்
உன்னுடன் சண்டையிட விரும்பியது
உன் அன்பை தினமும்
அழகாய் ரசிக்க
ஆசைப்பட்டதால்
அனைத்தையும்
உன்னிடம் பகிர்ந்து கொள்ளும்போது
உன் உருவில் என் அன்பு நண்பர்களை
காண்பதுபோல் ஓர் எண்ணம்
தோழியும் நீயே!
என்னை சுமந்த தாயும் நீயே!!