இப்படிக்கு உன் நண்பன்

எத்தனையோ மனஸ்தாபங்கள்
சின்ன சின்ன கோபங்கள்
எத்தனையோ மாறுதல்கள்
இதெல்லாம்
நம்மை ஒன்றும் செய்ததில்லை

ஆனால்
பனம் என்னும் மாயை
ஒன்று
நம்மை வெகுதூரம் வீசி
எறிந்தது

நாம்
கல்லுரியில் கை கோர்க்கவில்லை
என்றாலும்
காலை தொடங்குவதும்
மாலை முடிவதும்
உன் முகத்தோடும்
சின்ன சின்ன
பகிர்வுகளோடும் தான்

இது இவ்வளவு தான்
உன்னால் முடியும்
என
எதையுமே நீ
எளிமையாக எடுத்துச் சொல்லும்
பண்புதான் இன்றளவும்
உன்னில் கண்டு
நான் வியப்பது

இது உனக்குப் பிடிக்கும்
என
உன் இலைக்கு வருதை
நீ
எனக்கு
எடுத்து வைப்பது
அடிக்கடி
என்
தந்தையையே நினைவுப்
படுத்திக்கொண்டிருக்கும்

எனை
காதல் தோல்வியில்
இருந்து மீட்டு எடுத்த
உன் பிரிவை
எப்படி ஈடுகட்ட போகிறேன்
என்பது இன்னமும்
கேள்விக்குறியாகவே தான்
இருக்கிறது

உனக்கு
கடல் தாண்டிய பயணம்
நமக்கு
நீண்ட பிரிவு

இதை
கனத்த இதயத்துடன் தான்
எழுத ஆரம்பித்தேன்
ஏனோ
கலங்கிய கண்களுடன்
முடிக்கிறேன்

இப்படிக்கு
உன் நண்பன்...

எழுதியவர் : ஸ்ரீதர் (10-Jan-15, 3:01 pm)
பார்வை : 302

மேலே