விடுதலைக்கே தவிக்கிறோம் !
தாயே தமிழீழதாயே
உன்னைவிட்டு நெடுந்தூரம்
போகிறோம் !
முடிசூடும் மண்ணே
ஒருபிடி மண்ணின்றி மண்ணோடு
சாய்கிறோம் !
பொங்குநீரோடு நுரையாய்
கரைமோதும் கடலே
கரையேற்றும் படக்கோட்டியாய்
அலைகிறோம் !
ஏளனமாய் சிரிக்கும்
தறுதலைகள் பகையை
விடுதலை தகையில்
சரிக்கிறோம் !
ஒய்யாரமாய் ஓய்ந்திட
விடுதலையென்ன
கேலிக்கை கூத்தோ...
ஒடுங்கி ஒழிந்திட
ஈழமென்ன
உரிமையில்லா சொத்தோ...
மீண்டும்
பிறக்கிறோம் !
வதைத்த சிதைவிலிருந்து
புதைத்த விதையிலிருந்து
வலிதாங்கும் வேங்கையாய்
தளிர்கிறோம் !
விடுதலையென்றதுமே
வெடிக்கிறோம் !
இருந்தும்
வாழ்கிறோம் !
தலைவன் வருவானென்று
தமிழீழம் மலருமென்று
புலம்பெயர்ந்தும் தமிழராய்
பூக்கிறோம் !
உளமுண்ர்ந்து பட்டொளிவீசிடும்
புலிக்கொடியோடு கீதம்
படிக்கிறோம் !!