முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!
நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்!
பண்டார வன்னியன் ஆண்ட
வேங்கைகள் தேசம்!
சோழன் வலம் வந்த
ஈழதேசம்!
இது நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்...
புத்த தேசம்
புத்தி இழந்த வஞ்சக சிங்களம்!
நயவஞ்சக இந்தியம்!!
முன்னங்கால் பாய்ச்சல் கொண்ட
எம் எல்லாளன் படையை
எதிர்க்கொள்ள வக்கற்றவனின்
நாசச்சுவடு மே 18!
கொத்துக்குண்டுகள் வீசி
லட்சம் உயிர் விழுங்கினாய்...
கோட்டைக்கட்டி வாழ்ந்த இனத்தின்
கூடாரத்தையும் குறிப்பார்த்து
காந்திய ராணுவம் வழிவகுத்து
இஸ்ரேலிய எறிகணை
தமிழர் தலைமீது விழுந்து
புலிபடையினை வீழ்த்துவேனென்று
நாடு நாடாய் ஊர் ஊராய்
இருபத்தோர் தேசமெங்கும்
யாசகமெடுத்த வரிசையில்
ரேடார் இந்திரா இந்தியா
மீக்-29 சீனா
பல்குழால் பீரங்கி பாகிசுதான்
கடன்காரனின்
இரண்டாயிரம்கோடி கடன்
சிங்களன்
இந்தியன் பெருமையுடன்
தமிழன் பொறுமையுடன்
...முள்ளிவாய்க்கால்
காமவெறி தணிக்க
திருப்பதியில் பரிகாரம்...
தில்லியில் நாய்க்கெல்லாம் அதிகாரம்...
இதன் பெயர்தான் போரா!
தமிழச்சி மாரறுத்தாய்
மாவீரர் துயில் இடித்தாய்
தம்பிகள் உயிரெடுத்தாய்
இதன் பெயரோ போர்...
பன்னாட்டு சபையின்
அணுஆயுத ஒப்பந்த
பரீட்சிய கூடம்
முள்ளிவாய்க்கால்!
முள்வேலிக்குள் அடைத்த பெரும்
ஒப்பந்தம்!
எம்மின துரோகிகளுக்கு பதவி
இது
எம்மின எதிரியின் பெரும் உதவி…
இன்னும் எங்களை
என்னவென்று நினைத்தாய்!
கற்கள் என்றா
முற்கள் என்றா
புலிகள் என்றுதானடா தடைவிதிதாய்!!
எச்சில் பட்ட எம்தேசத்தை
புலிகளே மீட்டெடுக்கும்
அண்ணன் களத்தில் போராடுவார்!
தம்பிகள்
நாங்கள் புலத்தில் போராடுவோம்!!
அண்ணன் எழுப்பிய விடுதலைதீ!
முத்துக்குமார் மூட்டிய செந்தீ!!
முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!!!