+அவமானம்!+
அவ மானத்தை பெரிதாக கருதியதால்
நான் அவமானம் அடைந்தேன்!
இடிக்காத என்னை
இடித்ததாய் எண்ணி
இதழ்களால் வறுத்தெடுத்தாள்!
பேருந்தில் பயணம் செய்த
அனைவரின் கண்களும் என்மேலே!
ஏதோ கொள்ளைக்காரனைப் பார்ப்பதுபோல
கூனிக்குறிகியபடி நின்றிருந்தேன்!
குதறவேண்டுமென பதறிவந்த வார்த்தைகளை
சிதறாமல் வேலி போட்டு அடைத்துவைத்தேன்!
இதில் கேள்வி வேறு! மூளை இருக்கா? என்று
ஏன் உன்கிட்ட இல்லையா? என்று கேட்க ஆசை தான்!
அவளை விரும்பிய மனம் பூட்டு போட்டது வாய்க்கு!
நிறுத்தம் வந்தவுடன் இறங்கிச்சென்றேன்!
ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள்!
ஏனென்று தெரியவில்லை மனதை விட்டுவிட்டு தனியாய் பயணப்பட்டேன்!