கவலை

போனவன் வருவனோ
திரும்பாமலே போவானோ
தினம் தினம் சாகுரமே
திரும்பிப் பார்க்க யாருமில்லையோ ?

எல்லை தாண்டி மீன் புடிச்சா
இலங்கையில சுடுவாங்களாம்
எழுதப் படிக்க தெரியாத புருஷன்
எல்லைய சரியா அளப்பானோ?

கடலில் ஒரு துன்பம் என்றால்
கப்பலை நோக்கி ஓடுவானோ
கப்பற் படை கப்பலை நம்நாடு
தாரை வார்த்ததை அறிவனோ ?

ஆழியில் கொடியது "சுறா"வென்று சொல்வானே
அங்கும் "சுடும்"மனிதர் உண்டென்று உணரானோ
மீன் பிடிக்க போனவன் மீண்டு வருவனோ
இல்லை "உப்புமீனாய்" அவன் மாண்டு வருவனோ ?

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (12-Sep-13, 12:49 pm)
Tanglish : kavalai
பார்வை : 101

மேலே