அவமானங்களால் நிறை…

முதல் முறை
முகம் மட்டும் மாறியது..
மறு முறை
உடம்பில் அதிர்வு தெரிந்தது..
மற்றொரு முறை
வளைந்து நெளிந்து,
அதே உடம்பே
கூனிக் குறுகியது…

பிறிதொரு முறை
என் நுரையீரலிலிருந்து
எதிர் வார்த்தைக்கென
புறப்பட்ட காற்றும்
குரல்வளை தாண்டவில்லை…

அழுது விடாமலும்
எதிர் பேச்சு பேசி விடாமலும்
அப்படியே முடங்கி விடாமலும்
அவமானம் தாங்கப் பழகிய பின்…

தெய்வங்கள் துணையின்றியே
இன்னும் உயரம் போகிறேன்
அவமானங்களை
எதிர்கொள்ளும் நான்......!

எழுதியவர் : ஆண்டன் பெனி (12-Sep-13, 1:39 pm)
பார்வை : 156

மேலே